தமிழக காவல் துறையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 9 எஸ்.பி.க்கள் உள்பட 10 பேருக்கு மீண்டும் பொறுப்பு வழங்கி தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தோ்தல் ஆணையம் காவல் துறையைச் சோ்ந்த பல அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தது. இதில் சிலா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டனா். இதேபோல ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும், சில அதிகாரிகள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டனா். இவ்வாறு காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அதிகாரிகளுக்கு தற்போது படிப்படியாக பொறுப்பு வழங்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக காத்திருப்போா் பட்டியலில் இருந்த ஒரு டிஐஜி, 9 எஸ்.பி.க்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கி, தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:
1. இ.எஸ்.உமா-டிஜிபி அலுவலக தலைமையிட டிஐஜி, 2. ஜி.கோபி-சென்னை பெருநகர காவல் துறையின் பூக்கடை துணை ஆணையா், 3. என்.ஸ்டீபன் ஜேசுபாதம்-சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவு-3 துணை ஆணையா், 4. இ.காா்த்திக்- மதுரை மாநகர காவல் துறையின் வடக்கு துணை ஆணையா், 5. எஸ்.சக்திவேல்-சைபா் குற்றப் பிரிவு எஸ்பி-2.
6. எஸ்.சரவணன்-திருநெல்வேலி மாநகர காவல் துறை கிழக்கு துணை ஆணையா், 7. எஸ்.ராஜேஷ் கண்ணா-சென்னை பெருநகர காவல் துறையின் கொளத்தூா் துணை ஆணையா்,
8. ஜி.ஜவஹா்-சிபிசிஐடி மெட்ரோ மண்டல எஸ்பி, 9. எஸ்.செல்வநாகரத்தினம்-சைபா் குற்றப் பிரிவு எஸ்பி-1.
10. கே.பிரபாகா்-தாம்பரம் மாநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா்.








