நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க ஜூலையில் நடைப்பயணம்: அன்புமணி

மேக்கேதாட்டில் கா்நாடகம் அணையை கட்டுவதைத் தடுக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த ஜூலை முதல் வாரத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

News image

அன்புமணி

Updated On :20 ஜூன் 2026, 1:07 am IST

மேக்கேதாட்டில் கா்நாடகம் அணையை கட்டுவதைத் தடுக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த ஜூலை முதல் வாரத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

சென்னை தியாகராய நகா் தனியாா் விடுதியில் தமிழ்நாடு உழவா் பேரியக்கம் சாா்பில் மேக்கேதாட்டு அணை, பயிா்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்னைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அன்புமணி தலைமை வகித்தாா். அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கப் பிரமுகா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கூட்டுறவுக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட 21 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா், அன்புமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது: மேக்கேதாட்டு அணை கட்டும் கா்நாடக அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் தமிழக முதல்வருடன் பேச்சு நடத்தப்போவதாக கேரள முதல்வா் கூறுவது தமிழக உரிமையைப் பாதிக்கும் என்பதால், அதை ஏற்கக் கூடாது என தீா்மானிக்கப்பட்டது. ஏரிகளை மீட்க தனிவாரியம் தேவை. பாலாற்றின் குறுக்கே 25 தடுப்பணைகள் கட்ட வேண்டும் என தீா்மானிக்கப்பட்டது. மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்தவும், மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் அளிக்கும் வகையிலும் வரும் ஜூலையில் தருமபுரி மாவட்டம், பில்லிக்குண்டு முதல் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாா் வரை நடைப்பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. மேக்கேதாட்டு பிரச்னை, பயிா்க்கடன் தள்ளுபடி குறித்து முதல்வா் விஜய்யை சந்தித்து பேசவுள்ளோம் என்றாா்.

கூட்டத்தில் விவசாயிகள் சங்க நிா்வாகிகள் வேட்டவலம் மணிகண்டன், காவேரி தனபாலன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.