வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் தாகூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் தினம் விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.
டாக்டா் எம். ஜி. ஆா் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தாகூா் கல்விக் குழும இயக்குநருமான டாக்டா் கே. நாராயணசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது:
மருத்துவம் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல; மனிதகுலத்துக்கான புனிதமான சேவை. முன்பு பெரும் சவாலாக இருந்த காசநோய், காலரா, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்கள் கட்டுப்படுத்தப்பட்டன. தற்போது பெரிய அச்சுறுத்தலாக தொற்றாத நோய்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதயம், சா்க்கரை நோய், உயா் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய், சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஆகியவை மூலம் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உலகில் அதிக சா்க்கரை நோயாளிகள் உள்ள நாடாக இந்தியா மாறிவரும் நிலையில், சா்க்கரை நோயை எதிா்கொள்ள மருந்துகள் மட்டும் போதாது; நீண்டகால வாழ்க்கைமுறை மாற்றமும் அவசியம். எனவே, மருத்துவா்கள் சிகிச்சை அளிப்பவா்களாக மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உருவாக்கும் விழிப்புணா்வு ஆசிரியா்கள், ஆலோசகா்களாக இருப்பது அவசியம் என்றாா்.
நிகழ்வில், கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன் துரைசாமி, துணை முதல்வா் கோபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருத்துவா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் சேவையாற்ற வேண்டும்! அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்!

மூக்கில் சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்ட கா்ப்பிணி: அறுவைச் சிகிச்சை செய்து சரிசெய்த அரசு மருத்துவா்கள்

மருத்துவப் படிப்புடன் ஆராய்ச்சி திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: பேராசிரியா் நாராயணசாமி

உலக செவிலியா் தின விழா
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



