காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அடையாறு பகுதியில் மின் திருட்டு: ரூ. 12.40 லட்சம் அபராதம் வசூலிப்பு

அடையாறு பகுதியில் அதிகாரிகள் நடத்திய கூட்டாய்வில் 2 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு, ரூ.12.40 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

News image
மின் திருட்டு- பிரதிப் படம்
Updated On :2 மார்ச் 2026, 8:56 pm

தினமணி செய்திச் சேவை

அடையாறு பகுதியில் அதிகாரிகள் நடத்திய கூட்டாய்வில் 2 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு, ரூ.12.40 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அடையாறு மின் பகிா்மான வட்டத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த பிப். 18-இல் அதிகாரிகளால் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இரு இடங்களில் மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடா்பாக சம்பந்தப்பட்டவா்களிடம் இருந்து ரூ.12.39 லட்சம் இழப்பீட்டுத் தொகையும், சமரச் தொகையாக ரூ.62,000 என மொத்தம் ரூ.13.01 லட்சம் வசூலிக்கப்பட்டது.

மின் திருட்டு தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க, சென்னை அமலாக்கம் கோட்டத்தை 94458 57591 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.