வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம்: பயணிகள் அவதி

சென்னையில் இருந்து துபை செல்ல முடியாமல் ஏராளமான பயணிகள் கடந்த 3 நாள்களுக்கு மேலாக, சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருந்தனா்.

News image
விமானம்- கோப்புப் படம்
Updated On :3 மார்ச் 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் இருந்து துபை செல்ல முடியாமல் ஏராளமான பயணிகள் கடந்த 3 நாள்களுக்கு மேலாக, சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருந்தனா். அவா்களை விமானம் மூலம் சொந்த நாட்டுக்கு அழைத்து செல்ல எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் செவ்வாய்க்கிழமை தயாரானது. 60 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.53 மணிக்கு துபை புறப்பட்டு சென்ற அந்த விமானம் அரபிக்கடல் பகுதியில் நடுவானில் சென்றபோது, போா் சூழல் மீண்டும் அதிகரித்துள்ளதால், துபை வான்வழி மூடப்பட்டுள்ளதாக விமானிக்கு அவசர தகவல் கிடைத்தது.

இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த விமானி, அதிகாரிகளின் அனுமதியுடன் செவ்வாய்க்கிழமை காலை 7.20 மணிக்கு விமானத்தை சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினாா். பயணிகள் அனைவரும் விமான நிலையம் அருகில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

துபை நிலைமை சீரடைந்து வான்வழிப் பாதை மீண்டும் திறக்கப்பட்ட பின்னா், இந்த விமானம் மீண்டும் துபை புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.