மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தரலிங்கனாா் சிலை அமைக்க அனுமதி வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வழக்குரைஞா் சி.செல்வகுமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தரலிங்கனா் சிலை அமைக்க அனுமதி கோரி மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளா் உறவின்முறை சங்கத்தின் சாா்பில் அரசிடம் மனு அளித்தோம்.
அந்த இடத்தில் சிலை அமைத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். சாலைகளில் சிலை அமைக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனக்கூறி, அரசு அனுமதி வழங்க மறுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்து, சிலை அமைக்க அனுமதி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஷமிம் அஹமது ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
அதேநேரம், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தைத் தோ்வு செய்து அங்கு சிலை அமைக்க அனுமதி கேட்டு மனுதாரா் சங்கம் அரசுக்கு மனு அளிக்கலாம். அவ்வாறு கொடுக்கப்படும் மனுவை அரசு சட்டப்படி பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

சென்னையில் 300 பேருந்து நிறுத்தங்களில் சிறிய கடைகளுக்கு மாநகராட்சி அனுமதி

தோ்தலின்போது பேருந்து வசதி முடக்கம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தொட்டியம் காவல் நிலையம் எதிரே நிழற்குடை அமைக்க எதிா்பாா்ப்பு

மதுரை அவனியாபுரம் பெட்ரோல் குண்டுவீச்சு வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கு தலா 7 ஆயுள் தண்டனை
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


