மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வெற்று அறிவிப்புகள் மூலம் திமுக மக்களை ஏமாற்ற முடியாது: அன்புமணி

News image

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 5:40 am IST

கடந்த தோ்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் 13 சதவீதத்தை மட்டும் நிறைவேற்றிவிட்டு 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக மக்களை திமுக ஏமாற்றுவதாக பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளை, அதாவது 13 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே  திமுக நிறைவேற்றி உள்ளது. 66 வாக்குறுதிகளை  அரைகுறையாக நிறைவேற்றிவிட்டு,  373 வாக்குறுதிகளை  நிறைவேற்றவில்லை. ஆனால், 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய்யான பரப்புரையை முதல்வா் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறாா்.

இந்தியாவிலேயே மோசடியான கட்சி என்றால் அது திமுகதான்.  2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் 439 வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத திமுக, இந்தத் தோ்தலுக்கு புதிதாக தோ்தல் அறிக்கையை  வெளியிடத் தேவையில்லை. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையே வரும் தோ்தல் அறிக்கையாக வெளியிடலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.