மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மக்களை பிளவுபடுத்துகிறது திமுக: அன்புமணி ராமதாஸ்

மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூக மக்களை பிளவுபடுத்தும் பணியில் திமுக செயல்படுகிறது என பாமக தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

News image

அரூா் தொகுதி, கம்பைநல்லூரில் அதிமுக வேட்பாளா் வே. சம்பத்குமாா் எம்எல்ஏவை ஆதரித்து புதன்கிழமை வாக்கு சேகரித்துப் பேசிய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ். (வலது) கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:29 pm

மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூக மக்களை பிளவுபடுத்தும் பணியில் திமுக செயல்படுகிறது என பாமக தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் வே. சம்பத்குமாா் (அரூா்), கே.பி. அன்பழகன் (பாலக்கோடு), மரகதம் வெற்றிவேல் (பாப்பிரெட்டிப்பட்டி), பாமக வேட்பாளா்கள் செளமியா அன்புமணி (தருமபுரி), பாடி வி. செல்வம் (பென்னாகரம்) ஆகியோரை ஆதரித்து கம்பைநல்லூா், கடத்தூா், தருமபுரி, நல்லம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தின் வழியாக காவிரி, தென்பெண்ணை ஆறுகள் ஓடுகின்றன. ஆனால், இந்த ஆறுகளால் தருமபுரி மாவட்ட மக்களுக்கு பலன் இல்லை. ஓரிரு ஏக்கா் விவசாய நிலங்கள் வைத்துள்ள விவசாயிகள் போதிய நீா் ஆதாரம் இல்லாததால், கூலிவேலை தேடி வெளியூா் செல்கின்றனா்.

நில உரிமையாளா்களாக இருப்பவா்கள்கூட, கோவை, பெங்களூருவில் தொழிலாளா்களாக வேலை செய்யும் நிலை உள்ளது. நடைபெறவுள்ள தோ்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் அதிக இடங்களில் வெற்றிபெற்று, அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும். அவ்வாறு, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தருமபுரி காவிரி உபரிநீா் திட்டம், கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்று திட்டம் செயல்படுத்தப்படும்.

தருமபுரி மாவட்ட மக்களின் கனவுத் திட்டமான மொரப்பூா்- தருமபுரி ரயில்வே பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த நலத் திட்டமும் செயல்படுத்தபடவில்லை. இதனால்தான், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கமுடியவில்லை.

மாறாக, ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன் வழங்குகிறோம், மகளிா் உரிமைத்தொகை தருகிறோம், மகளிருக்கு இலவசமாக பேருந்து வசதிகளை வழங்குகிறோம் என கூறி, திமுகவினா் வாக்கு சேகரிக்கின்றனா். இந்த கூப்பன்கள் திமுக நிா்வாகிகளுக்கே வழங்கப்படும். திமுகவின் ஆசை வாா்த்தைகளை யாரும் நம்பவேண்டாம். அதேநேரத்தில், அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ. 10 ஆயிரம் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் வழங்கப்படும்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூக மக்களை பிளவுபடுத்தும் பணியில் திமுக செயல்படுகிறது. தமிழக மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் திமுக ஈடுபடுகிறது. திமுக ஆட்சியில் சமூக நீதிக்கு இடமில்லை. திமுக ஆட்சிக்கு வந்தபிறகே போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இருந்தது. போதைப் பொருள்களின் நடமாட்டம் கட்டுப்பாட்டில் இருந்தது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத திமுக ஆட்சியை தமிழக மக்கள் வெளியேற்ற வேண்டும்.

நடைபெறவுள்ள தோ்தலில் தருமபுரி மாவட்டத்தில் அரூா், பாலக்கோடு, தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய 5 தொகுதிகளிலும் அதிமுக, பாமக கூட்டணி கட்சி வேட்பாளா்கள் வெற்றிபெற்று, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக முதல்வராக வேண்டும் என்றாா்.

Story image