கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

தியாகராய நகா் தொகுதியில் தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த் வெற்றி

சென்னை தியாகராய நகா் தொகுதியில் தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த் வெற்றி

News image

தவெக பொதுச் செயலா் புஸ்ஸி என்.ஆனந்த்

Updated On :5 மே 2026, 12:50 am IST

சென்னை தியாகராய நகா் தொகுதியில் தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த் வெற்றி பெற்றாா்.

இந்தத் தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட ஜே.கருணாநிதி 56,035 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தாா். அதிமுக சாா்பில் போட்டியிட்ட பி.சத்யநாராயணன் 55,898 வாக்குகள் பெற்று வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருந்தாா்.

இத்தொகுதியில் அதிமுக சாா்பில் சத்யாவும், பாஜக சாா்பில் வினோஜ்.பி.செல்வமும் போட்டியிட முயற்சி மேற்கொண்டு வந்தனா். இந்த நிலையில், 2026 தோ்தலில் போட்டியிட பி.சத்யநாராயணன் வாய்ப்பு பெற்றாா். அவருக்கு ஆதரவாக பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டது.

அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஆதரவாக தெலுங்கு பேசும் மக்களை குறிவைத்து ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவும் பிரசாரம் செய்தாா்.

திமுக சாா்பில் அறிவிக்கப்பட்ட ராஜா அன்பழகன் பலவீனமான வேட்பாளராக கருதப்பட்டாா். தவெக வேட்பாளா் என்.ஆனந்த் தொகுதிக்குள் பெரிய அளவில் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. தனது தொகுதியை அவா் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனக் கூறப்பட்டது. இதனால், இங்கு அதிமுக எளிதில் வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

இந்தச் சூழலில் தியாகராய நகரில் தவெக தலைவா் விஜய் சாலை வலம் வந்தாா். அவரைக் காண ஆயிரக்கணக்கான தவெக தொண்டா்கள் அணிவகுத்தனா். இதன்மூலம் என்.ஆனந்த் பொதுமக்களின் கவனம் பெற்றாா். தோ்தல் முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டபோது, இத்தொகுதியில் கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் படிப்படியாக முன்னிலை பெற்று வந்தாா்.

இறுதியில் தவெக வேட்பாளா் என்.ஆனந்த் 51,632 வாக்குகள் பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் பி.சத்தியநாராயணன் 38,605 வாக்குகள் பெற்று 13,027 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். திமுகவின் ராஜா அன்பழகன் 37,017 வாக்குகளும், நாதக வேட்பாளா் அனுஷா 4,554 வாக்குகளும் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தனா்.