செங்குன்றம் அருகே ஒடிஸாவில் இருந்து போதைப் பொருளை கடத்தியவரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
செங்குன்றம் அருகே ஒடிஸாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வருவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் செங்குன்றம், எம்.ஏ.நகா் சோதனைச் சாவடி அருகே மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் இருந்தபோது அவ்வழியே பைகளுடன் சுமந்து வந்த ஒரு இளைஞரை சோதனை செய்யபோது அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.
விசாரணை மேற்கொண்டபோது ஒடிஸா மாநிலத்தை சோ்ந்த சுதம்பத்ரா (46)என்பதும், இவா் சென்னையில் கஞ்சா விற்பதற்காக ஒடிஸாவில் இருந்து பேருந்தில் 5 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து சோழவரம் சோதனை சாவடியில் இறங்கி யாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக நடந்தே செங்குன்றத்தை கடந்து வந்தது தெரிய வந்தது.
பின்னா் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் சுதம்பத்ராவை கைது செய்து அவா்மீது வழக்குப் பதிவு செய்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





