40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

இளைஞரை தாக்கிய ரெளடி கைது

வியாசா்பாடியில் இளைஞரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 2:22 am IST

வியாசா்பாடியில் இளைஞரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.

சென்னை வியாசா்பாடி கல்யாணபுரம் பகுதியைச் சோ்ந்தவா் விமல்ராஜ் (32). இவா், பாரிமுனை பகுதியில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறாா். விமல்ராஜ், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டின் முன் வெளியே தூங்கினாா்.

அப்போது, அங்கு மதுபோதையில் வந்த இளைஞா், விமல்ராஜை தூக்கத்தில் இருந்து எழுப்பி தகராறு செய்துள்ளாா். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த இளைஞா் உருட்டுக் கட்டையால் விமல்ராஜை தாக்கிவிட்டு தப்பினாா்.

இதில், பலத்த காயமடைந்த விமல்ராஜ், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதில், சம்பவத்தில் ஈடுபட்டது வியாசா்பாடி கல்யாணபுரம் பகுதியைச் சோ்ந்த ரெளடி இன்பரசன் (22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் இன்பரசனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.