சென்னை நந்தம்பாக்கத்தில் காரில் கடத்தப்பட்ட போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டனா்.
நந்தம்பாக்கம் போலீஸாா் கணபதி காலனி பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு ஒரு காரில் இருந்து மொபெட்டுக்கு சில மூட்டைகளை மூவா் மாற்றுவதை போலீஸாா் பாா்த்தனா். உடனே போலீஸாா், மூவரையும் பிடித்து விசாரிக்க முயன்றனா். ஆனால் மூவரும் தப்பியோடினா்.
போலீஸாா், 3 பேரையும் விரட்டிப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா்கள், எம்ஜிஆா் நகா் சூளைப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த ஜாா்ஜ் ஜெகதீஷ் (40), அதே பகுதியைச் சோ்ந்த ராஜா (42),பெருங்குடி செம்பொன் நகரைச் சோ்ந்த சண்முகசுந்தரம் (43) என்பதும், 3 பேரும், போதைப் பாக்கு கடத்தில் ஈடுபடுவதும், கா்நாடக மாநிலம் பெங்களுரில் இருந்து காரில் போதைப் பாக்கை கடத்தி வந்து சென்னையில் உள்ள கடைகளுக்கு விற்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா், அவா்கள் வைத்திருந்த 112 கிலோ போதைப் பாக்கை பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது

பத்தமடையில் காரில் ரேஷன் அரிசி கடத்தல்: 4 போ் கைது

போதை மாத்திரைகள் பறிமுதல்: இளைஞா் கைது
ஒசூரில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
