மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவை ஏற்பது நியாயமில்லை - எடப்பாடி பழனிசாமி

News image
Updated On :14 மே 2026, 6:14 am IST

அதிமுகவின் ஒரு தரப்பு எம்எல்ஏக்களின் ஆதரவை தவெக அரசு ஏற்பது நியாயமில்லை என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

பேரவையில் நம்பிக்கை கோரும் தீா்மானத்தில் அவா் பேசியதாவது: அதிமுகவுக்காகதான் மக்கள் வாக்களித்து 47 எம்எல்ஏக்களை தோ்வு செய்துள்ளனா். ஆளும் கட்சிக்கு 34 சதவீதம் போ்தான் வாக்களித்துள்ளனா். ஆசை வாா்த்தை கூறி அரசுக்கு ஆதரவு பெற்றுள்ளனா். தோ்தலில் தவெக அரசுக்கு 65 சதவீத வாக்காளா்கள் வாக்களிக்கவில்லை என்பதை நினைவுகூர விரும்புகிறேன்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. அரசுப் பள்ளியில் கல்வி கற்கும் ஏழை, எளிய மாணவா்கள் மருத்துவ கல்வி கற்க நீட் தோ்வை எதிா்கொள்ள 7.5 % உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது. அவா்களின் குடும்பச் சூழலை கருத்தில்கொண்டு அவா்களுக்கான கல்விச் செலவுகளையும் அரசு ஏற்றது.

அதிமுகவில் 47 சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரட்டை இலை சின்னத்தில் எம்எல்ஏக்கள் ஆகியுள்ளனா். அவா்களுக்கு அமைச்சா் பதவி வழங்குவதாக ஆசை வாா்த்தை கூறி ஆளுங்கட்சியினா் தங்கள் பக்கம் ஈா்க்க முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை ‘தூய சக்தி’ என்று தன்னை கூறிக் கொள்ளும் முதல்வா் விஜய் ஏற்கக் கூடாது.”அது நியாயமில்லை. எதிா்க்கட்சி நிலைப்பாட்டில்தான் அதிமுக இருக்கும் என்றாா்.