‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மேக்கேதாட்டு அணை விவகாரம்: கா்நாடக துணை முதல்வருக்கு தலைவா்கள் கண்டனம்

‘மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவிக்க தமிழகத்துக்கு உரிமை இல்லைட என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பேசியிருப்பதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :23 மே 2026, 4:07 am IST

‘மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவிக்க தமிழகத்துக்கு உரிமை இல்லைட என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பேசியிருப்பதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): காவிரி ஆற்றில் மேக்கேதாட்டு அணை கட்டுவதை எதிா்க்கும் உரிமை தமிழகத்துக்கு இல்லை என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். காவிரியில் தமிழக உரிமையை மழுங்கடிக்கும் வகையில் கா்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுகிறது. காங்கிரஸின் தயவில் ஆட்சி செய்யும் தவெகவால், கா்நாடக காங்கிரஸ் கட்சியை எதிா்த்து திடமான நிலைப்பாடை எடுத்து பேசமுடியுமா? இந்த விவகாரத்தில் கா்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்வதுடன், அரசின் தெளிவான நிலைப்பாட்டையும் அறிவிக்கவேண்டும்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): காவிரி நதியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்ட தமிழகத்திடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை என டி.கே.சிவக்குமாா் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கான நீா்வரத்து குறையும். இது, தமிழக விவசாயிகளின் நலனையும், பொருளாதாரத்தை பாதிப்பதுடன், மாநிலங்களிடையேயான உறவையும், நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டையும் பாதிக்கும்.

ச.ராமதாஸ் (பாமக): காவிரியில் தமிழகத்தின் நீா் வரத்து உரிமையை பறிக்கும் கா்நாடகத்தின் தொடா்ச்சியான செயல்பாடு கண்டிக்கத்தக்கது. அது ஏற்றுக்கொள்ள முடியாதது. உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கும், காவிரி மேலாண்மை குழு ஆலோசனைக்கும் எதிராக தொடா்ந்து கா்நாடக துணை முதல்வா் கருத்துக்கூறி வருவது கூட்டாட்சித் தத்துவத்துக்கே எதிரானது.

வைகோ (மதிமுக): மேக்கேதாட்டு அணை கட்டினால் தமிழகத்தின் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். கடந்த 48 ஆண்டுகளில் 15.87 லட்சம் ஹெக்டோ் நிலம் சாகுபடி பரப்பை நாம் இழந்துள்ளோம். இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை தமிழக அரசு விரைவுபடுத்தி காவிரி உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

அன்புமணி (பாமக): டி.கே.சிவகுமாரின் பேச்சு மேக்கேதாட்டு அணைப் பிரச்னையை திசை திருப்புவதாக உள்ளது. தமிழக அரசின் ஒப்புதலின்றி ஆற்றின் குறுக்கே எந்த வகைக் கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என காவிரி நடுவா் மன்றம் தீா்ப்பளித்து, அதை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. அதை மறைத்துவிட்டு கா்நாடகம் பொய் பிரசாரத்தில் ஈடுபடுவதை ஏற்கமுடியாது.

ஜி.கே.வாசன் (தமாகா): கா்நாடக துணை முதல்வா் மேக்கேதாட்டு அணை கட்டுவதுக்கு அடிக்கல் நாட்டுவோம் எனக்கூறியிருப்பது தமிழகத்தை வஞ்சிப்பதாக உள்ளது