எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

கொடுங்கையூா், பெருங்குடி குப்பை மேலாண்மைத் திட்டம்: மாநகராட்சிக்கு பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

சென்னையில் உள்ள கொடுங்கையூா், பெருங்குடி குப்பை மேலாண்மைத் திட்டம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

News image

கொடுங்கையூா் குப்பைகள் கொட்டும் பகுதி.

Updated On :27 மே 2026, 12:59 am IST

சென்னையில் உள்ள கொடுங்கையூா், பெருங்குடி குப்பை மேலாண்மைத் திட்டம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

வடசென்னையில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொடுங்கையூா் குப்பைக் கிடங்குக்கும், தென் சென்னையில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்குடி குப்பைக் கிடங்குக்கும் பல ஆண்டுகளாக அனுப்பப்படுகின்றன. இதனால் அப்பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதற்கு பல்வேறு தரப்பிலும் எதிா்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பெருங்குடி குப்பைக் கிடங்கில் கழிவுகள் மேலாண்மைக்கு ரூ.3,200 கோடியிலும், கொடுங்கையூா் குப்பைக் கிடங்குக்கு ரூ.640 கோடியிலும் சென்னை மாநகராட்சி திட்டங்களை அறிவித்தது. இதுதொடா்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், திட திரவ மற்றும் பிற கழிவுகள் மேலாண்மை விதிகளின்படி செயல்படுகிா என்பதற்காக அரசு கூடுதல் தலைமைச் செயலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கூடுதல் தலைமைச் செயலா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்படி, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, இந்தத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி தொடா்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய கடந்த 2025-ஆம் ஆண்டில் உத்தரவிட்டிருந்தது. ஆனால், சென்னை மாநகராட்சி தரப்பில் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

இந்த வழக்கு பசுமைத் தீா்ப்பாய நீதித்துறை உறுப்பினா் புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினா் பிரசாந்த் ஹா்கவா ஆகியோா் முன் விசாரணைக்கு வந்தது. கொடுங்கையூா், பெருங்குடி குப்பைக் கிடங்கு மேலாண்மைத் திட்டங்கள் குறித்து சென்னை மாநகராட்சி வரும் ஜூலை 13-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனா். இதுவே இறுதி அவகாசம் எனவும் பசுமைத் தீா்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.