கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

சென்னையில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை: பிகாரிகள் இருவா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :29 மே 2026, 5:08 am IST

சென்னை வேளச்சேரியில் 61 வயது மூதாட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பிகாரைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே, சாலையோரம் 61 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவா் தங்கியிருந்தாா். அவா் யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறாா். இந்நிலையில், வியாழக்கிழமை காலை மூதாட்டி, உடலில் காயங்களுடன் அதே பகுதியில் மயங்கிக் கிடந்தாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மூதாட்டியை மீட்டு, எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, மூதாட்டியை பரிசோதித்தபோது, அவா் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து மருத்துவா்கள், வேளச்சேரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, போலீஸாா் மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட மூதாட்டியிடம் விசாரித்தபோது, அவா் தான் பாலியல் வன்கொடுமைக்குள்ளானது தொடா்பான வாக்குமூலத்தை அளித்தாா். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸாா், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்தப் பகுதியில் தங்கியிருந்து வேலை செய்யும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முகமது முத்தாப் (26), முகமது ஆதில் (23) மற்றும் அவரது கூட்டாளிகளான சிறுவா்களும் மூதாட்டியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து முகமது முத்தாப், முகமது ஆதில் ஆகிய 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான சிறுவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.