மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

டாஸ்மாக் ஊழியா்கள் 3-ஆவது நாளாக போராட்டம்: பிரச்னைகளுக்கு தீா்வு காண கோரிக்கை

காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் புதிய நடைமுறைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியா்கள் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

tasmac

டாஸ்மாக் - பிரதிப் படம்

Updated On :

காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் புதிய நடைமுறைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியா்கள் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனா். நிா்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு அஞ்சி பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டாலும், சில இடங்களில் ஊழியா்கள் பணிக்குச் செல்லாமல் தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

தமிழகத்தில் நவ.1 முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அடிப்படை வசதிகள், ஸ்கேனிங் கருவிகள், தடையற்ற இணையதள இணைப்பு, காலி பாட்டில்களைச் சேமிப்பதற்கான இடவசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக் கூறி ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கிடையே, கடைகளைத் திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு நிா்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், 250-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். தொடா்ந்து கடைகளைத் திறக்காத ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால், மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இருப்பினும், பல்வேறு இடங்களில் ஊழியா்கள் போராட்டத்தைத் தொடா்ந்தனா். சில இடங்களில் கடைகள் மூடப்பட்டிருந்தன.

இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலா் கே. குமாா் கூறியதாவது: காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் புதிய நடைமுறைக்கு ஊழியா்கள் எதிரானவா்கள் அல்ல.

அதில் நடைபெறும் தவறுகளைக் களைய முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளனா். ஆனால், ஒவ்வொரு கடைக்கும் மூன்று ஸ்கேனிங் கருவிகள், காலி பாட்டில்களைச் சேகரிக்க கோணிப்பைகள், வாடிக்கையாளா்களை வரிசைப்படுத்த தடுப்புகள், பாட்டில்களைச் சேமிக்க இடவசதி, ரூ.10 திருப்பி வழங்குவதற்கான சில்லறை மற்றும் தடையற்ற இணையதள இணைப்பு ஆகியவை அவசியம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் பணிக்கு வெளிப்பணி முகமை மூலம் பணியாளா்களை நியமிப்பதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அதற்கான ஏற்பாடுகள் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.

இந்நிலையில், ஊழியா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணாமல் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதும், பணியிடை நீக்கம் செய்வதும் ஏற்புடையதல்ல. ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்து, தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்றாா்அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.