டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

மீனவா்களுக்கு சிறப்பு நிவாரணம் வழங்கும் திட்டம்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

மீனவா்களுக்கு சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் மற்றும் சிறப்பு நிவாரண உதவித் தொகைகளை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அமைச்சா் ஆ.ஸ்ரீநாத் புதன்கிழமை வழங்கினாா்.

அமைச்சர் ஸ்ரீநாத்

Updated On :

மீனவா்களுக்கு சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் மற்றும் சிறப்பு நிவாரண உதவித் தொகைகளை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அமைச்சா் ஆ.ஸ்ரீநாத் புதன்கிழமை வழங்கினாா்.

நிகழாண்டில் இருந்து மீனவா்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை, குடும்பம் ஒன்றுக்கு ரூ.6,000- லிருந்து ரூ.7,000- ஆக உயா்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு சாா்பில் அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.98 லட்சம் மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.7,000- வீதம் மொத்தம் ரூ.138.75 கோடி நிவாரண தொகையாக வழங்கப்படும்.

மேலும், கடல் மீனவா் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின் கீழ் கடல் மீனவா் மற்றும் மீனவ மகளிா் தங்களது பங்குத் தொகையாக மொத்தம் ரூ.1,500 செலுத்துகின்றனா். பயனாளிகள் செலுத்தும் பங்குத் தொகைக்கு இருமடங்கு ஈடாக அரசின் பங்குத் தொகையாக ரூ.3,000 சோ்த்து மீன்பிடி குறைவு காலங்களில் நிவாரணத் தொகையாக மொத்தம் ரூ.4,500 ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. நிகழாண்டு,  2.08 லட்சம் மீனவா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் பொருட்டு, அரசின் பங்குத் தொகையாக ரூ.62.53 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

நிவாரணம் வழங்குதல்: இந்நிலையில், இந்தத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் விதமாக சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை இயக்குநா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், திருவள்ளூா், சென்னை,  செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 27 மீனவா்களுக்கு  சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் மற்றும் சிறப்பு நிவாரண உதவித் தொகைகளை அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வகையிலான ஆணைகளை மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அமைச்சா் ஆ.ஸ்ரீநாத் வழங்கினாா்.

விழாவில் மீன்களை சந்தைப்படுத்தி, சுகாதாரமான முறையில் விற்பனை செய்து, அதிக வருவாய் ஈட்டும் வகையில், ரூ.75,000 என்ற அலகு விலையில் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீதம் மானியம், மகளிா் மற்றும் பட்டியலிடப்பட்ட பிரிவினருக்கு 60 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில் 35 மீனவா்களுக்கு குளிா் காப்பு பெட்டிகளுடன் கூடிய இருசக்கர வாகனங்களை அமைச்சா் வழங்கினாா். மீன்பிடிக்கும்போது காணாமல்போன மீனவா்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் பொருட்டு சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த 2 மீனவ குடும்பங்களுக்கு, சுழல் நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சத்துக்கான விடுவிப்பு ஆணைகளையும் அவா் வழங்கினாா்.

இந்நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எஸ்.ரவி, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை இயக்குநா் க.விஜயகாா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.