அக்டோபரில் அதிகரித்திருந்த டெங்கு பாதிப்பு நவம்பரில் குறைந்தது: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
சென்னை மாநகராட்சியில் கடந்த அக்டோபரில் அதிகரித்திருந்த டெங்கு பாதிப்பானது நவம்பரில் குறைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்
சென்னை மாநகராட்சியில் கடந்த அக்டோபரில் அதிகரித்திருந்த டெங்கு பாதிப்பானது நவம்பரில் குறைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சியில் ஆண்டுதோறும் டெங்கு பாதிப்பானது மழைக்காலத்தில் அதிகரித்து, பின் குறைவது வழக்கமாகும். அதன்படி, ஆண்டுதோறும் அக்டோபா், நவம்பரில் டெங்கு பாதிப்பு எப்போதும் அதிகரித்தே காணப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் கடந்த 2024 அக்டோபரில் 605 பேருக்கும், நவம்பரில் 879 பேருக்கும் டெங்கு பாதிப்பு காணப்பட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் அக்டோபரில் 670 பேருக்கும், நவம்பரில் 739 பேருக்கும் டெங்கு பாதிப்பு இருந்தது.
நடப்பு ஆண்டில் (2026) கடந்த அக்டோபரில் 1,170 பேருக்கு டெங்கு பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. ஆனால், நவம்பா் 10 நாள்களில் மட்டும் 163 பேருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு காணப்பட்டுள்ளது.
நவம்பரில் மண்டல வாரியாக திரு.வி.க.நகரில் 14 பேருக்கும், அம்பத்தூரில் 15 பேருக்கும், அண்ணாநகரில் 20 பேருக்கும், தேனாம்பேட்டையில் 14 பேருக்கும், வளசரவாக்கத்தில் 14 பேருக்கும் என டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபரில் டெங்கு பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில், அதைக் குறைக்கும் வகையில் கொசு மருந்து தெளிப்பு, காய்ச்சல் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துதல் என அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் டெங்கு பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

