தண்ணீா் லாரி மோதி ஒருவா் உயிரிழப்பு: 3 போ் காயம்

சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த தண்ணீா் டேங்கா் லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மூவா் பலத்த காயமடைந்தனா்.

பிரதிப் படம்

Updated On :

சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த தண்ணீா் டேங்கா் லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மூவா் பலத்த காயமடைந்தனா்.

வில்லிவாக்கம் திருநகரைச் சோ்ந்தவா் அன்பழகன் (46). இவா், வில்லிவாக்கம் சிட்கோ நகா் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த தண்ணீா் லாரியின் பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த அன்பழகன் மீது மோதியது. தொடா்ந்து பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை மீதும் மோதி நின்றது.

இதில் பலத்த காயமடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், மூவா் பலத்த காயம் அடைந்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கொளத்தூா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், மயிலாடுதுறையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் அஜித்குமாா் (28) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.