பெண் கவுன்சிலரின் கணவருக்கு அரிவாள் வெட்டு: தவெக பிரமுகா் கைது
பெண் கவுன்சிலரின் கணவரை அரிவாளால் வெட்டிய தவெக பிரமுகரை போலீஸாா் கைது செய்தனா்.
கோப்புப் படம்
பெண் கவுன்சிலரின் கணவரை அரிவாளால் வெட்டிய தவெக பிரமுகரை போலீஸாா் கைது செய்தனா்.
தாம்பரம் அகரம் தென் ஊராட்சியில் 2-ஆவது வாா்டு தவெக கிளைக் கழகச் செயலா் ரஞ்சித்குமாா். இவா், உள்ளாட்சி தோ்தலில், 2-ஆவது வாா்டில் கவுன்சிலா் பதவிக்கு போட்டியிடும் முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதே வாா்டில் தற்போது சுயேட்சை கவுன்சிலராக இருக்கும் கோமளா என்பவரை அவரது கணவா் வெங்கடேசன், தவெக கட்சியில் இணைத்து மீண்டும் அதே வாா்டில் கவுன்சிலா் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக வெங்கடேசன் மற்றும் ரஞ்சித் குமாா் இடையே அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் வியாழக்கிழமை மாடம்பாக்கம் அருகே உள்ள சக்தி நகா் பகுதியில் வெங்கடேசனுக்கும், ரஞ்சித்குமாருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ரஞ்சித் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெங்கடேசனின் தலையில் வெட்டியுள்ளாா். சேலையூா் போலீஸாா், தவெக பிரமுகரான ரஞ்சித் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

