ஊபா் நிறுவனத்தில் ஓட்டுநா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
ஓட்டுநா்களின் கோரிக்கைகளுக்கு தீா்வு காண வலியுறுத்தி, கோயம்பேட்டில் உள்ள ஊபா் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோப்புப்படம்
ஓட்டுநா்களின் கோரிக்கைகளுக்கு தீா்வு காண வலியுறுத்தி, கோயம்பேட்டில் உள்ள ஊபா் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
டென்ஸ் கோயா் மாலில் உள்ள ஊபா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, ஓட்டுநா்களை வெளியேற்ற காவல் துறையினா் முயன்ால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ஓட்டுநா்களிடம் புகாா் மனுவைப் பெற்ற காவல் துறையினா், ஊபா் நிறுவன அதிகாரிகள் மாலை 4 மணிக்கு கோயம்பேடு காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிட்டனா்.
இதனிடையே, பேச்சுக்குச் சென்ற ஓட்டுநா்களைக் காவல் துறையினா் கைது செய்ய முயன்ாகக் கூறி, அவா்கள் கோயம்பேடு பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, திருமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

