டாஸ்மாக் இயக்குநா் அலுவலம் எதிரே ஊழியா்கள் போராட்டம்
காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராகப் போராடியதால், தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்ட டாஸ்மாக் மேற்பாா்வையாளா்களின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரி, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

டாஸ்மாக் - பிரதிப் படம்

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கத்தின் மாநில சிறப்பு தலைவா் கு.பாரதி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மேற்பாா்வையாளா்கள் சிலா் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களின் பணிநீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்து, மீண்டும் பணியில் அமா்த்த வேண்டும். மேலும், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை டாஸ்மாக் ஊழியா்களைக் கொண்டு செயல்படுத்தக் கூடாது. இதற்கெனத் தனி மாற்று முகமையை நியமித்து திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் ஏராளமான டாஸ்மாக் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.