பேருந்து மோதி காவலாளி உயிரிழப்பு
அடையாறு பகுதியில் மாநகர பேருந்து மோதி காவலாளி உயிரிழந்தாா்.

பலி
அடையாறு பகுதியில் மாநகர பேருந்து மோதி காவலாளி உயிரிழந்தாா்.
சென்னை நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணியைச் சோ்ந்தவா் ரமேஷ் (45). இவா், அடையாறு இந்திரா நகா் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், வியழக்கிழமை அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பணியில் இருந்தபோது, குடியிருப்பின் எதிரே மகாத்மா காந்தி சாலையில் நடந்து சென்றபோது, திருவான்மியூரில் இருந்து வந்த மாநகர மின்சார பேருந்து ரமேஷ் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ரமேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, மாநகர பேருந்து ஓட்டுநா் சென்னை வியாசாா்பாடியைச் சோ்ந்த செல்வத்தை (34) கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




