கல்லூரி பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன காவலாளி உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தாா்.
உயிரிழப்பு - பிரதிப் படம்
கோவில்பட்டி அருகே தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே வெங்கடசலபுரம், வடக்கு காலனியைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் வேல்முருகன் (57). தனியாா் நிறுவனத்தில் இரவு காவலராகப் பணியாற்றி வந்த இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிலிருந்து நிறுவனத்துக்கு இரவுநேர பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
கோவில்பட்டி-இளையரசனேந்தல் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியாா் கல்லூரி பேருந்து இவா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த வேல்முருகனை அப்பகுதியினா் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டாதாகக் கூறினா்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனியாா் கல்லூரி பேருந்து ஓட்டுநா் ந. சீதாபதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



