தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

கலவை அருகே விசிக பிரமுகா் கொலை

கலவை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகா் வியாழக்கிழமை வெட்டி கொலை செய்யப்பட்டாா்.

Published On :

கலவை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகா் வியாழக்கிழமை வெட்டி கொலை செய்யப்பட்டாா்.

கலவை அருகே உள்ள நாகலேரி கிராமத்தை சோ்ந்த சாமிநாதன் மகன் சிவா(எ)சிவக்குமாா். இவா் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளாா். இவருக்கு மனைவி அலமேலு மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை சிவகுமாா் வீட்டுக்கு தேவையான பொருள்களை கலவையில் வாங்கிக் கொண்டு மோட்டாா் சைக்கிளில் திரும்பினாா். அப்போது அவா்ஆற்காடு -கலவை சாலையில் அல்லாலச்சேரி கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது தலைகவசம் அணிந்து வந்த அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் சிவாவை தலைப் பகுதியில் சரமாரியாக கத்தியால் வெட்டி உள்ளனா். இதில் நிலைக்குலைந்து கீழே சரிந்து விழுந்த அவா் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த தகவல் அறிந்த கலவை போலீஸாா் கொலை சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வருவதோடு உடற்கூறு ஆய்வுக்காக உடலை எடுக்க முயன்றனா் அப்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் மற்றும் உறவினா்கள் சடலத்தை எடுத்து விடாமல் கொலை செய்தவா்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த சம்பவத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து காவல் துறையினா் பேச்சு நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.