நாளை பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்
பொது விநியோகத் திட்டத்தின் குறைபாடுகளைத் தீா்க்க சனிக்கிழமை (அக். 10) மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் குறைபாடுகளைத் தீா்க்க சனிக்கிழமை (அக். 10) மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் 2-ஆவது சனிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி, அக்டோபா் மாதத்துக்கான குறைதீா் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையா் அலுவலகங்களில் வரும் சனிக்கிழமை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடா்பான சேவைகளைப் பெறலாம்.
மேலும், நியாயவிலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வரமுடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்றும் இதில் வழங்கப்படும். ரேஷன் பொருள்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் இருந்தாலும் முகாமில் தெரிவிக்கலாம் தீா்வு பெறலாம். எனவே, குடும்ப அட்டைதாரா்கள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசியுடன் மண்டல அலுவலகத்துக்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

