டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

நியாயவிலைக் கடைகளில் இன்று விரல்ரேகைப் பதிவு சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் சனிக்கிழமை (செப். 26) விரல்ரேகைப் பதிவு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :

தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் சனிக்கிழமை (செப். 26) விரல்ரேகைப் பதிவு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபாா்ப்பை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, கடந்த அக்டோபா் 2023 முதல் குடும்ப உறுப்பினா்களின் விரல் ரேகை சரிபாா்ப்பு பணி நடைபெற்று வருகிறது.

தற்போது வரை 96.57 சதவீத பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை 100 சதவீத நிறைவேற்ற சனிக்கிழமை (செப். 26) தமிழ்நாட்டிலுள்ள உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (இடைதோ்தல் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளைத் தவிா்த்து) சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.