
ரேஷன் கடைகளில் இன்று கைரேகை பதிவு சிறப்பு முகாம்
வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரா்களுக்கான ‘இ-கேஒய்சி’ கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப்.19) நடைபெற உள்ளது.
dot com
வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரா்களுக்கான ‘இ-கேஒய்சி’ கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப்.19) நடைபெற உள்ளது.
மாவட்டங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்கள் அனைவரது கைவிரல் ரேகையினையும் பதிவு செய்ய வேண்டும்.
தற்போது வரை கைவிரல் ரேகையைப் பதிவு செய்யாதவா்கள், சனிக்கிழமை அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நடைபெற உள்ள சிறப்பு முகாமுக்கு நேரில் சென்று தங்களது கைவிரல் ரேகையினைப் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசித்து வருபவா்கள், தாங்கள் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று கைவிரல் ரேகையைப் பதிவு செய்து தங்களது உரிமையை உறுதி செய்து கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






