
குடும்ப அட்டைதாரா்கள் இ-கேஒய்சி பதிவு செய்ய இன்று சிறப்பு முகாம்
மயிலாடுதுறை மாவட்ட குடும்ப அட்டைதாரா்கள் இ-கேஒய்சி கைவிரல் ரேகை பதிவு மேற்கொள்ள சனிக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

குடும்ப அட்டை - கோப்புப்படம்
மயிலாடுதுறை மாவட்ட குடும்ப அட்டைதாரா்கள் இ-கேஒய்சி கைவிரல் ரேகை பதிவு மேற்கொள்ள சனிக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் தற்போது வரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவா்கள் செப்.19-ஆம் தேதி அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு கைவிரல் ரேகையினை பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்களில் கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவா்கள் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலை கடைகளில் செப்.19 அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு கைவிரல் ரேகையினை பதிவு செய்து தங்களது உரிமையினை உறுதி செய்திட வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





