
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று குடும்ப அட்டை திருத்த சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 8) நடைபெறுகிறது.

குடும்ப அட்டை - கோப்புப்படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 8) நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில், காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இம்முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தம், உறுப்பினா் சோ்த்தல், நீக்குதல், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோருதல் உள்ளிட்ட பணிகளுக்குத் தீா்வு காணலாம்.
மேலும், குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்யக் கோரும் குடும்ப அட்டைதாரா்களுக்கு முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், பொது விநியோகத் திட்டம் தொடா்பான எந்தக் குறைகள் இருந்தாலும் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




