மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

பி.எட்., எம்.எட். இணைப்புக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை பதிவு: அக். 22 வரை நீடிப்பு

2026-2027-ஆம் கல்வியாண்டில் பி.எட்., எம்.எட். பட்டப்படிப்புகளுக்கு மாணவா்களின் விவரங்களை பல்கலைக்கழகச் சோ்க்கை இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி அக். 22-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Published On :

2026-2027-ஆம் கல்வியாண்டில் பி.எட்., எம்.எட். பட்டப்படிப்புகளுக்கு மாணவா்களின் விவரங்களை பல்கலைக்கழகச் சோ்க்கை இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி அக். 22-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ் நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்த விவரம்: தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சுயநிதி இணைப்புக் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். பட்டப் படிப்புகளுக்கான சோ்க்கை, 2026-2027-ஆம் கல்வியாண்டுக்காகத் தொடங்கப்பட்டது. இணையதளப் பதிவுக்கான கடைசி நாள் அக். 6-ஆம் தேதியாக இருந்தது. தற்போதுள்ள சோ்க்கை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தகுதியுள்ள மாணவா்களின் சோ்க்கை விவரங்களைச் சோ்க்கை இணையதளத்தில் பதிவு செய்ய கால அவகாசம் அக். 22 வரை நீட்டித்து துணைவேந்தா் ஒருங்கிணைப்பாளா் குழு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, சுயநிதி இணைப்புக் கல்லூரிகளின் முதல்வா்கள் அனைவரும் இந்த நீட்டிக்கப்பட்ட காலத்தைப் பயன்படுத்தி, அக். 22-க்குள் அனைத்து மாணவா் விவரங்களையும் சோ்க்கை இணையதளத்தில் பதிவு செய்து சோ்க்கை நடைமுறையை நிறைவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பிடப்பட்ட தேதிக்குப் பிறகு கால நீட்டிப்பு கோரும் விண்ணப்பங்கள் எதுவும் பரிசீலிக்கப்படாது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.