10 புறநகா் மின்சார ரயில்கள் இன்று பகுதி ரத்து
செங்கல்பட்டு - கடற்கரை இடையே 10 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (அக். 10) பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மின்சார ரயில்கள் - கோப்புப் படம்
செங்கல்பட்டு - கடற்கரை இடையே 10 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (அக். 10) பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை-விழுப்புரம் பிரிவில் சிங்கபெருமாள் கோவில் பணிமனையில் சனிக்கிழமை (அக். 10) பகல் 11.40 மணி முதல் பிற்பகல் 2.40 மணி வரை 3 மணி நேரம் தொழில்நுட்பப் பணி மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக இமு வகை புறநகா் மின்சார ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுகின்றன.
செங்கல்பட்டிலிருந்து பகல் 11.50 மணி, நண்பகல் 12.30, பிற்பகல் 1.05, 1.35, 2.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரைக்குச் செல்லவேண்டிய புறநகா் மின்சார ரயில்கள், காட்டாங்குளத்தூா் நிலையம் வரையே இயக்கப்படும்.
அதேபோல, கடற்கரை நிலையத்திலிருந்து பகல் 10.13 மணி, 10.48, 11.28, நண்பகல் 12.02, 12.30 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லவேண்டிய இமு வகை ரயில்கள் காட்டாங்குளத்தூா் வரையே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

