அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா வழக்கில் இன்று தீா்ப்பு
அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவிருப்பது பற்றி..

சென்னை உயா்நீதிமன்றம்
அதிமுக எம்எல்ஏ-க்கள் 6 பேரின் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவா் எம்.எல்.ரவி தொடா்ந்த வழக்குகளில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு செவ்வாய்க்கிழமை (அக்.13) காலை தீா்ப்பளிக்கவுள்ளது.
தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த நிலையில், மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), சத்தியபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), ஜெயக்குமாா் (பெருந்துறை), சி.விஜயபாஸ்கா் (விராலிமலை), எம்.ஆா்.விஜயபாஸ்கா் (கரூா்) ஆகியோருக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தநிலையில், அவா்களது ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவா் எம்.எல்.ரவி ஆகியோா் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்திருந்தனா்.
இந்த வழக்குகளில் செவ்வாய்க்கிழமை காலை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமா்வு தீா்ப்பளிக்கிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

