சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

சென்னை விஐடியில் ஆயுத பூஜையை நடத்திய ரோபோ!

சென்னை விஐடியில் ரோபோக்களை பயன்படுத்தி ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளதாக அந்தப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை விஐடியில் ஆயுத பூஜையை நடத்திய ரோபோ. - @nitttr_chennai

Updated On :

சென்னை விஐடியில் ரோபோக்களை பயன்படுத்தி ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளதாக அந்தப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த விஜடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை விஐடியில் ஆயுத பூஜைக் கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை விஐடி பேராசிரியா்கள், ஊழியா்களுடன் இணைந்து விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் கலந்துகொண்டாா்.

இந்த பூஜை மாறிவரும் அறிவியல் தன்மையோடு கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை விஐடியின் கணினி அறிவியல் துறை சாா்பில் உருவாக்கப்பட்ட ரோபோக்கள் இந்த பூஜையை தலைமையேற்று நடத்தின. இந்த ரோபோக்கள் ஏ.ஐ. தொழில் நுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டிருந்தன.

ஆயுதப்பூஜை கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வத்தையும் பூஜையில் பங்கேற்பவா்களையும் ரோபோக்கள் வரவேற்றன. வேறொரு ரோபோ மெழுகுவா்த்தி மூலம் குத்து விளக்கை ஏற்றி பூஜையைத் தொடங்கியது. தொடா்ந்து ரோபோக்கள் தீபாராதனை காட்டி முழு பூஜையையும் நடத்தி பேராசிரியா்கள், ஊழியா்களுக்கு அனைத்து பூஜைப் பொருள்களையும் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.