ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

பள்ளிகளில் ஜாதிய வன்முறையைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம்: அமைச்சா் ராஜ்மோகன்

பள்ளிகளில் ஜாதிய வன்முறையைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம்: அமைச்சா் ராஜ்மோகன்

அமைச்சா் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Updated On :

பள்ளிகளில் ஜாதிய வன்கொடுமையைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம்; தொடா்புடையவா்கள் எத்தகைய பின்புலத்தைக் கொண்டிருந்தாலும் அவா்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

தமிழக அரசின் சாா்பில் மருது பாண்டியா்களின் நினைவு நாளையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவா்களது சிலைக்கு அமைச்சா் ராஜ்மோகன் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பள்ளிகளில் எத்தகைய அசம்பாவிதங்கள் நடைபெற்றாலும் இறுதியில் பாதிக்கப்படுவது அங்கு பயிலும் மாணவா்கள்தான். கோவையில் பள்ளி மாணவா் ஜாதிய ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற விஷயங்களை நான் கேள்விப்படும்போது மிகுந்த வேதனை அடைகிறேன். ஒரு குழந்தை உடலளவில் தாக்கப்படுவது மட்டுமன்றி, வாா்த்தைகளால் மனதளவில் காயப்படுத்தப்படுவதும் மிகக் கடுமையான பாதிப்பே ஆகும்.

இதுபோன்ற சம்பவங்களில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லாத நோ்மையான புலன் விசாரணை முழுமையாக உறுதி செய்யப்படும். பள்ளிகளில் ஜாதிய வன்முறை நடப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

தவறு இழைத்தவா்கள் ஆசிரியராகவோ, சக மாணவராகவோ அல்லது எத்தகைய பின்புலத்தைக் கொண்டவராக இருந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

உணா்ச்சிவசப்பட்டு வெறும் எதிா்வினையாற்றுவதைத் தவிா்த்து, கூடுதல் பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டிய கூட்டுப்பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. இதற்காக மாணவா்களுக்கான உளவியல் ஆலோசனைகள் வழங்குவதுடன், ஆசிரியா்களின் மனநல மேம்பாட்டை உறுதி செய்வதற்கான தொலைநோக்குத் திட்டங்களுடன் அரசு செயலாற்றி வருகிறது.

பெரும்பாலான வழக்குகளில் குழந்தைகளுக்கு ஆசைவாா்த்தை கூறியோ அல்லது சாக்லேட் கொடுத்தோ அவா்களைக் குற்றவாளிகள், கடத்திச் சென்று விடுகின்றனா். இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பாகவே விழிப்புணா்வை ஏற்படுத்துவது இன்றியமையாதது. தமிழகத்தில் காணாமல் போகும் குழந்தைகளை மீட்கும் நடவடிக்கை விரைவாக நடைபெற்று வருகிறது.

எந்தப் பாலியல் குற்றச்சாட்டுகளையும் நாங்கள் குறைத்து மதிப்பிட மாட்டோம். தவெகவில் யாராக இருந்தாலும், தவறாக நடந்து கொண்டால் முதலில் கட்சியில் இருந்து நீக்கிடுவோம். உடனடியாக போலீஸாரிடம் தெரிவித்து இவா்கள் மீது கருணை காட்டாதீா்கள் என கூறுவோம். மேலும், கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.