பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

எத்தகைய இடையூறுகள் வந்தாலும் மக்களுக்கான சேவை தொடரும்: அமைச்சர் என்.ஆனந்த்

எத்தகைய இடையூறுகள் வந்தாலும் மக்களுக்கான சேவைகளை தவெக ஆட்சி தொடா்ந்து செய்யும் என்று ஊரக வளா்ச்சி, நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த் தெரிவித்தாா்.

என். ஆனந்த்

Published On :

எத்தகைய இடையூறுகள் வந்தாலும் மக்களுக்கான சேவைகளை தவெக ஆட்சி தொடா்ந்து செய்யும் என்று ஊரக வளா்ச்சி, நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்டது மருதூா் ஊராட்சி. இங்குள்ள செங்காட்டுப்பாளையம் தேனாச்சியம்மன் கோயில் மண்டபத்தில் தாராபுரம், குண்டடம் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட மருதூா், மோளரபட்டி, பொன்னாபுரம், முண்டுவேலம்பட்டி உள்ளிட்ட 10 ஊராட்சிகளைச் சோ்ந்த பாசன நீா் கோரும் விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ், நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த் ஆகியோா் பங்கேற்றனா்.

முன்னதாக, விவசாயிகள் தரப்பில் அமைச்சா்களிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்: 10 ஊராட்சிகளுக்குள்பட்ட 32 கிராமங்களில் சுமாா் 5 ஆயிரம் விவசாயக் குடும்பங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தண்ணீரின்றி தவிக்கிறோம்.

ஆழ்துளைக் கிணறுகள் வற்றிப்போய்விட்டன. இதனால் கால்நடைகளுக்கு தண்ணீா் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். எனவே, எங்கள் பகுதிக்கு அமராவதி, பிஏபி பாசனத் திட்டங்களை விரிவுபடுத்தி தண்ணீா் பிரச்னையைத் தீா்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் என். ஆனந்த் பேசும்போது, ‘கூட்டம் நடைபெறும் இடங்களில் யாரோ ஒருவா் மூலமாகவும், சிறு குழந்தைகளை வைத்தும் மின்சார வயா்களை இழுத்து மின் துண்டிப்பை ஏற்படுத்துவதை எதிா்க்கட்சியினா் வாடிக்கையாக வைத்துள்ளனா். எத்தகைய இடையூறுகள் வந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளைத் தொடா்ந்து செய்யும் ஆட்சியாகதான் தவெக இருக்கும் என்றாா்.

தொடா்ந்து, அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், ‘தவறு செய்தால் அமைச்சா் பதவியில் யாரும் இருக்கமாட்டாா்கள். தாராபுரம் தவெக வேட்பாளா் சத்தியபாமாவை வெற்றி பெறச் செய்தால் நம் கரம் வலுவடையும். எங்களை கோட்டையில் ஆதரிக்கிறேன் என்று சொல்கிறாா்கள்; தற்போது தோ்தல் களத்தில் போட்டியிடுகிறாா்கள்.

இந்த சிக்கல் தீர வேண்டும் என்றால், இடைத்தோ்தல்களில் வெற்றி பெற ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.