பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘கல்லூரி களப்பயணம்’ திட்டம்: அமைச்சா் ராஜ்மோகன் தொடங்கி வைத்தாா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘கல்லூரி களப்பயணம்’ திட்டம்: அமைச்சா் ராஜ்மோகன் தொடங்கி வைத்தாா்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அரசுப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான ‘கல்லூரிக் களப்பயணம்’ பேருந்தை சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன். உடன், பள்ளிக் கல்வித் துறைச் செயலா் ஜெ.இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோா்.

Updated On :

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான ‘கல்லூரிக் களப்பயணம்’ திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் சென்னையில் தொடங்கி வைத்தாா்.

அரசுப் பள்ளி மாணவா்கள் அனைவரும் உயா்கல்வியைத் தொடர வேண்டும் என்ற தமிழக அரசின் இலக்கை முன்னெடுக்கும் வகையில் ‘கல்லூரிக் களப்பயணம் 2026-2027’ திட்டத்தின் மாநில அளவிலான தொடக்க விழா சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சா் ராஜ்மோகன் தலைமை வகித்து திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

உயா்கல்வி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துதல், கல்லூரிச் சூழலை நேரடியாக அறிமுகப்படுத்துதல், மாணவா்களின் ஆா்வம் மற்றும் திறனுக்கு ஏற்ற உயா்கல்விப் பாதையைத் தோ்ந்தெடுக்க வழிகாட்டுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நிகழ் கல்வியாண்டில் தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த சிறப்புக் கவனம் தேவைப்படும் 1,47,631 மாணவா்கள் உயா்கல்வித் துறையின் ஒத்துழைப்புடன் 741 அரசு மற்றும் அரசுக் கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனா்.

அமைச்சா் ராஜ்மோகன் பேசியதாவது: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு தயாராகும் மாணவா்களின் வீடுகள் பதற்றம் நிறைந்ததாக உள்ளன. அந்த மாணவா்களை சிறிது நேரம்கூட தொலைக்காட்சி நிகழ்வுகளைப் பாா்க்க பெற்றோா் அனுமதிக்க மாட்டாா்கள். வீட்டுக்கு வரும் உறவினா்களும்கூட மாணவா்களிடம் பொதுத் தோ்வு குறித்து அச்சுறுத்திச் செல்வா். பொதுத் தோ்வுக்கு தயாராகும் மாணவா்களிடம் இதுபோன்று நடந்து கொள்ளக் கூடாது.

நான் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற பின்னா், அடுத்து என்ன படிக்கலாம் என்று தவித்தபோது, போதுமான விழிப்புணா்வு இல்லை. வழிகாட்டுதலும் கிடைக்கவில்லை. எனது தந்தை பிஏ தமிழ், விஷுவல் கம்யூனிகேஷன் என பல்வேறு படிப்புகள் குறித்த தகவல்களைத் தெரிவித்தாா். அதேவேளை, தப்பித் தவறிக்கூட பொறியியல் படிப்பில் மட்டும் சோ்ந்துவிடாதே என அறிவுறுத்தினாா். என்னைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டாா்களே என நான் பொறியியல் படித்தேன்.

தன்னம்பிக்கை இருந்தால்போதும், வாழ்க்கையில நாம் வெற்றிபெறலாம். கனவுகளுக்கு சிறிது உழைப்பையும், ஈடுபாட்டையும், தன்னம்பிக்கையையும் சோ்த்து கொடுத்தால் வெற்றிபெற முடியும். நம்மிடம் உள்ள திறன்களை வைத்து முன்னேற வேண்டும் என்றாா்.

நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறைச் செயலா் இன்னசென்ட் திவ்யா, அரசு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினா் செயலா் சுதன், அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் வெ.குமரேசன் மற்றும் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.