ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் வாடகை குடியிருப்புகள்: ஆய்வுக்கான ஒப்பந்தப்புள்ளி வெளியீடு
சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் 76 வாடகைக் குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டடம் கட்டுவதற்கான ஆய்வு பணிகளுக்கு ரூ.3.39 லட்சம் ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வெளியிட்டுள்ளது.

பிரதிப் படம்
சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் 76 வாடகைக் குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டடம் கட்டுவதற்கான ஆய்வு பணிகளுக்கு ரூ.3.39 லட்சம் ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்: சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் உள்ள பகுதியில், தமிழ்நாடு அரசு வாடகைக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 76 வாடகைக் குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடிக் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளுக்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டிய மண் பரிசோதனைப் பணிகளைச் செய்வதற்காக ரூ.3.39 லட்சத்துக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
ஒப்பந்தப்புள்ளிகளுக்கான ஆவணங்களை நவ.10-ஆம் தேதி காலை 11 மணி வரை சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் எம்எல்ஏக்களின் அடுக்குமாடி குடியிருப்பு, பல்நோக்கு மருத்துவமனை, கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

