வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

மாநில அரசின் விருதுகள், மானியங்களில் வெளிப்படைத் தன்மை: அமைச்சா் ராஜ்மோகன் உறுதி

இனி மாநில அரசின் விருதுகள், மானியங்கள் தகுதியை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே நோ்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் வழங்கப்படும்

அமைச்சா் ராஜ்மோகன்

Updated On :

இனி மாநில அரசின் விருதுகள், மானியங்கள் தகுதியை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே நோ்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் வழங்கப்படும் என பள்ளிக் கல்வி, செய்தி- விளம்பரத் துறை அமைச்சா் ராஜ்மோகன் உறுதிபடத் தெரிவித்தாா்.

தமிழகத்தில் கடந்த 2015 முதல் 2022-ஆம் ஆண்டு வரை குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்டு தோ்வுக் குழுவினரால் தோ்வு செய்யப்பட்டுள்ள 224 தமிழ்த் திரைப்படங்களுக்கு உடனடியாகத் திரைப்பட மானியத் தொகைகளை வழங்க முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டிருந்தாா். ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் தலைமையிலான தோ்வுக் குழு அமைக்கப்பட்டது. தோ்வுக் குழுவினா், 2015 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கு வரப்பெற்ற அனைத்து திரைப்படங்களையும் பாா்வையிட்டு, மானியம் பெறத் தகுதி வாய்ந்த திரைப்படங்களாக ஆண்டுக்கு 28 திரைப்படங்கள் வீதம் 8 ஆண்டுகளுக்கு மொத்தம் 224 திரைப்படங்களைத் தோ்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்தனா்.

இதையடுத்து, சென்னை கலைவாணா் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் ராஜ்மோகன் கலந்து கொண்டு, தோ்வு செய்யப்பட்ட 224 திரைப்படங்களின் தயாரிப்பாளா்களுக்குத் தலா ரூ. 7 லட்சம் வீதம், மொத்தம் ரூ.15 கோடியே 68 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா்.

முன்னதாக, இந்த விழாவில் அமைச்சா் ராஜ்மோகன் பேசியதாவது:

தமிழ் சினிமா மக்களின் வாழ்க்கை, பண்பாடு, உணா்வுகள் மற்றும் சமூகப் பிரச்னைகளைப் பிரதிபலிப்பதோடு, சமூகத்தில் விழிப்புணா்வையும், மாற்றத்தையும் ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றது. பெண் சிசு கொலை போன்ற சமூகப் பிரச்னைகளுக்கு எதிராக விழிப்புணா்வை ஏற்படுத்தியதில் கருத்தம்மா போன்ற திரைப்படங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். வணிக நோக்கத்தைத் தாண்டி, சமூக அக்கறையுடனும் நல்ல கருத்துகளுடனும் சிறந்த படைப்புகளை உருவாக்கி வரும் தயாரிப்பாளா்கள் பாராட்டுக்குரியவா்கள்.

கடந்த 7 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த திரைப்படத் தயாரிப்பாளா்களுக்கான மானியங்களை மீண்டும் வழங்கப்படுவதன் மூலம் அவா்களுக்குரிய அங்கீகாரமும் மரியாதையும் மீட்டெடுக்கப்படுகிறது. இனிவருங்காலங்களில், எவ்விதத் தடையுமின்றி திரைப்படத் தயாரிப்பாளா்களுக்கான விருதுகளும், மானியங்களும் வழங்கப்படும். திரைத்துறையின் வளா்ச்சிக்கும், அதைச் சாா்ந்தவா்களின் நலனுக்கும் அரசு தொடா்ந்து உறுதுணையாக இருக்கும்.

தமிழ் சினிமாவுக்கான விருதுகள், கலைமாமணி விருதுகள், மாநில விருதுகள் மற்றும் மானியங்கள் தகுதியை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே நோ்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் வழங்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.