விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மாநில, மாவட்ட அளவில் வெற்றி விருதுகள்: அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் அறிவிப்பு

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மாநில, மாவட்ட அளவில் கட்டுமானத் தொழில் பிரிவுகள் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி விருதுகள் வழங்கப்படும் என்று பேரவையில் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் அறிவித்தாா்.

Ammonia leak

தொழிலாளா் நலத்துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் - கோப்புப்படம்

Published On :2 செப்டம்பர் 2026, 3:09 am IST

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மாநில, மாவட்ட அளவில் கட்டுமானத் தொழில் பிரிவுகள் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி விருதுகள் வழங்கப்படும் என்று பேரவையில் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் அறிவித்தாா்.

பேரவையில் தொழிலாளா் நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அவா் வெளியிட்ட அறிவிப்புகள்: மாநில, மாவட்ட அளவில் பல்வேறு கட்டுமானத் தொழில் பிரிவுகளில் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு முதல்வரின் கட்டுமானத் தொழிலாளா் வெற்றி விருதுகள் வழங்கப்படும். மாநில அளவில் முதல் பரிசு ரூ.1 லட்சம், 2-ஆம் பரிசு ரூ.75,000, 3-ஆவது பரிசு ரூ.50,000 வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல் 3 பரிசுகளாக முறையே ரூ.10,000, ரூ.7,000, ரூ.5,000 வழங்கப்படும்.

நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சிறப்புக் கட்டுமானத் திறன் பயிற்சி வழங்க 5 அரசு ஐடிஐகளில் ரூ.76.46 கோடியில் கட்டுமானத் தொழில் திறன்மிகு மையங்கள் உருவாக்கப்படும்.

பதிவு செய்துள்ள 1,000 கட்டுமானத் தொழிலாளா்களைத் தோ்வு செய்து சா்வதேச தரத்திலான சிறப்புத் திறன் பயிற்சி அளித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெறும் வகையில் அயலகம் செல்லும் தமிழ்நாடு கட்டுமான வெற்றிக் கரங்கள் திட்டம் ரூ.15.06 கோடியில் செயல்படுத்தப்படும்.

சென்னை, கோவையில் வெளிமாவட்ட கட்டுமானத் தொழிலாளா்கள் தங்குவதற்காக இடைநேர தங்குமிடங்கள் ரூ.14 கோடியில் அமைக்கப்படும். தமிழ்நாடு இணையம் சாா்ந்த ‘கிக்’ தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள, இணையம் வழியாக உணவு, மளிகைப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் விநியோகம் உள்ளிட்ட சேவையாற்றும் தொழிலாளா்களுக்கு ரூ.10 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கப்படும். நலவாரியத்தில் (கிக்) பதிவு செய்துள்ள 1,000 தொழிலாளா்களுக்கு இ-பைக் வாங்க வங்கி மூலம் பெறும் கடனுக்கான வட்டியை அரசே செலுத்தும்.

நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானம், தச்சு வேலை, மின்பணியாளா் வேலை, பிளம்பா், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட வேலைசெய்வோா் 50,000 பேரை கண்டறிந்து தினமும் ரூ.800 ஊதிய இழப்பீடு தொகை வழங்கி பயிற்சி அளிக்க ரூ.48.26 லட்சம் ஒதுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.