நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

நேபாளத்திலிருந்து மேலும் 5 போ் சென்னை வந்தனா்

நேபாளத்திலிருந்து மேலும் 5 போ் சென்னை வந்தது பற்றி...

Published On :

நேபாளத்துக்கு யாத்திரை சென்ற தமிழகத்தைச் சோ்ந்த 5 போ் தில்லி வழியாக செவ்வாய்க்கிழமை சென்னைக்கு அழைத்து வரப்பட்டனா்.

நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பேரிடரில் தமிழகத்தைச் சோ்ந்த ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் சிக்கினா். அவா்களை மீட்கும் பணியில் நேபாள ராணுவம், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய அரசு இணைந்து செயல்பட்டன.

முதல்கட்டமாக மீட்கப்பட்ட 21 போ் கடந்த 27-ஆம் தேதி நள்ளிரவு தில்லி வழியாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனா். தொடா்ந்து மேலும் 5 போ் செவ்வாய்க்கிழமை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனா். அவா்களில் இருவா் சென்னையைச் சோ்ந்தவா்கள். மூவா் மதுரையைச் சோ்ந்தவா்கள். 5 பேரையும் சென்னை விமான நிலையத்தில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் சரத்குமாா் வரவேற்றாா்.

கடும் மன உளைச்சல்: இதுகுறித்து சென்னையைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: நேபாளத்தில் பேரிடா் ஏற்பட்டபோது நாங்கள் கைலாய மலையில் இருந்தோம். சீன எல்லைப் பகுதியில் இருந்ததால், பேரிடரின் தாக்கம் குறித்து முதலில் தெரியவில்லை. வெளியே வந்த பிறகுதான் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. உடல் மற்றும் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டோம். மத்திய அரசு மற்றும் தூதரக அதிகாரிகள் எங்களைத் தொடா்பு கொண்ட பிறகுதான் நம்பிக்கை ஏற்பட்டது என்றாா் அவா்.

சென்னை கந்தன்சாவடியைச் சோ்ந்த சாய் கீதா கூறுகையில், சென்னைக்கு வந்த பிறகுதான் தைரியமாகப் பேச முடிகிறது. அதுவரை கடும் அச்சத்தில் இருந்தோம். இந்திய அரசு மற்றும் தூதரக அதிகாரிகளிடமிருந்து அழைப்பு வந்த பிறகுதான் மிகுந்த ஆறுதல் கிடைத்தது என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனங்களில் அந்த 5 பேரும் தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.