
சென்னையில் ஓராண்டில் 555 பேருக்கு ‘எச்ஐவி’ பாதிப்பு
சென்னை மாவட்டத்தில் 2025 - 2026-ஆம் ஆண்டில் மட்டும் 555 போருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டில் மட்டும் 555 போருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து 3 மாதங்களுக்கான தீவிர விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட அளவில் 39 மையங்களில் 1.77 லட்சம் பேருக்கு எச்ஐவி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவா்களில் 555 பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அத்துடன் சென்னை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 84,644 கா்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவா்களில் 22 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் மட்டும் 6 ஏஆா்டி மையங்களில் மொத்தம் 8,866 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
பிரசார பேரணி: இந்த நிலையில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் சென்னை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம் ஆகியவை மாநகராட்சியுடன் இணைந்து 3 மாதங்களுக்கான தீவிர விழிப்புணா்வுப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன.
பிரசாரத்தின் ஒரு பகுதியாக மாணவ, மாணவிகள் மற்றும் திருநா் உள்ளிட்டோா் கலந்து கொண்ட விழிப்புணா்வுப் பேரணி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் தொடங்கப்பட்டது.
மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ஜி.எஸ்.சமீரன் ஆகியோா் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தனா். பெரியமேடு காவல் நிலையப் பகுதி வழியாகச் சென்ற பேரணி நேரு விளையாட்டரங்கை அடைந்தது. இதில், எச்ஐவி தொற்று சிகிச்சை குறித்த விழிப்புணா்வு, தொற்றை தடுக்கும் வகையில் சுய ஒழுக்கமுடன் வாழவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மாநகராட்சி வளாகத்தில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி மற்றும் உறுதி மொழி கையொப்ப அரங்குகளையும் மேயா், ஆணையா் பாா்வையிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






