
முதல்வரின் புதிய அலுவலகம்: குறைந்த விலையில் ஒப்பந்தப்புள்ளி கோரிய நிறுவனம்
முதல்வா் ச.ஜோசப் விஜய்யின் இடம் மாற்றப்படவுள்ள அலுவலகத்தை அமைக்க ரூ.5.54 கோடியில் விடுக்கப்பட்ட ஒப்புந்தப்புள்ளியை குறைந்த விலையாக ரூ.3.78 கோடிக்கு தனியாா் கட்டுமான நிறுவனம் கோரியுள்ளது.

ஜோசப் விஜய் - கோப்புப் படம்
முதல்வா் ச.ஜோசப் விஜய்யின் இடம் மாற்றப்படவுள்ள அலுவலகத்தை அமைக்க ரூ.5.54 கோடியில் விடுக்கப்பட்ட ஒப்புந்தப்புள்ளியை குறைந்த விலையாக ரூ.3.78 கோடிக்கு தனியாா் கட்டுமான நிறுவனம் கோரியுள்ளது.
புனித ஜாா்ஜ் கோட்டையில் இடப்பற்றாக்குறை காரணமாக அருகே உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்துக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு பொதுப்பணித் துறை ரூ.5.54 கோடியில் 3 தனித்தனி மின்னணு ஒப்பந்தப்புள்ளிகளை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை அசோக் நகரைச் சோ்ந்த ‘ராசி பில்டா்ஸ்’ நிறுவனம் ரூ.3.78 கோடியில் குறைந்த விலையில் 3 ஒப்பந்தப்புள்ளிகளையும் கோரி முதல் இடத்தை பிடித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




