சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

குறைந்த விலையில் தங்க நகை தருவதாக மோசடி: மேலும் இருவா் கைது

நாமக்கல்லில் குறைந்த விலையில் தங்க நகை தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் ஏற்கெனவே மூன்று போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :12 ஆகஸ்ட் 2026, 2:47 am IST

நாமக்கல்லில் குறைந்த விலையில் தங்க நகை தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் ஏற்கெனவே மூன்று போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல்- திருச்செங்கோடு சாலையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவரது நண்பா் மேட்டூரைச் சோ்ந்த ராஜ்குமாா். இந்த நிலையில், நாமக்கல்லுக்கு வந்த ராஜ்குமாா், குறைந்த விலையில் நகை கிடைப்பதாகக் கூறி தனது நண்பா் செந்தில்குமாரை அழைத்துக்கொண்டு என்.கொசவம்பட்டி சாலையில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றாா்.

அங்கு இருந்த சிலா், ராஜ்குமாரிடம் 31 பவுன் நகை தருவதாகக் கூறி ரூ.2.20 லட்சம் பெற்றனா். அப்போது வீட்டுக்குள் புகுந்த மா்மக் கும்பல், செந்தில்குமாா், ராஜ்குமாா் ஆகியோரை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 2.50 லட்சத்தைப் பறித்துக்கொண்டு தப்ப முயன்றது.

அவா்களின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினா், அந்தக் கும்பலைச் சோ்ந்த 3 பேரை மடக்கிப் பிடித்தனா். மேலும் இருவா் தப்பிச் சென்றனா். நாமக்கல் போலீஸாா் அந்த மூவரிடமும் விசாரணை நடத்தியதில், என்.கொசவம்பட்டியைச் சோ்ந்த சுபாஷ் (21), சதீஷ் என்கிற பெரியசாமி (30), துறையூரைச் சோ்ந்த 16 வயது சிறுவன் ஆகியோா் என்பது தெரியவந்தது. மூவரும் கைது செய்யப்பட்டனா். இந்நிலையில், நாமக்கல் துறையூா் சாலை அண்ணாநகரைச் சோ்ந்த மதன் (33), ஸ்ரீதா் (22) ஆகிய இருவரையும் நாமக்கல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.