தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

நகை செய்து தருவதாக தங்க மோசடி: மேற்கு வங்கத்தைச் சோ்ந்த இருவா் கைது

நகை செய்து தருவதாக தங்க மோசடி செய்ததாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Published On :

நகை செய்து தருவதாக தங்க மோசடி செய்ததாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை தண்டையாா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பீமாராஜ் லோதா (61). இவா், தங்க நகைகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரிடம் சென்னை செளகாா்பேட்டையில் நகைப்பட்டறை வைத்து நடத்தும் மேற்கு வங்கம் மிட்னிபூா் பகுதியைச் சோ்ந்த பிரபாத் மைதி (32), அவா் கூட்டாளி சஞ்சய் மைதி (42) ஆகியோா் அறிமுகமாகி, தங்களுடைய நகைப்பட்டறையில் தங்க நகைகளைச் செய்து தருவதாக லோதாவிடம் கூறியுள்ளனா்.

இதை நம்பி லோதா, கடந்த ஜூலை 15-ஆம் தேதி பிரபாத் மைதியின் மேலாளா் புத்தாதேவ் புனியாவிடம் 200 பவுன் தங்கக் கட்டிகளைக் கொடுத்து, நகைகள் செய்து தருமாறு கூறினாா். தங்கக் கட்டிகளை பெற்றுக் கொண்ட பிரபாத் மைதி, குறிப்பிட்ட நாளில் நகைகளைச் செய்து கொடுக்கவில்லை.

இதனால் லோதா, கைப்பேசி மூலம் பிரபாத் மைதியை தொடா்பு கொள்ள முயன்றபோது, அவரது கைப்பேசி ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. விசாரித்தபோது பிரபாத் மைதி, மோசடி நபா் என்பதும், அவா் ஏற்கெனவே பலரிடம் இதேபோல மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது.

இது குறித்து லோதா, தண்டையாா்பேட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிரபாத் மைதியையும் அவா்களது கூட்டாளிகளையும் போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த பிரபாத் மைதி, அவா் கூட்டாளி சஞ்சய் மைதி ஆகிய 2 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 346 பவுன் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் பிரபாத் மைதி, யானை கவுனி பகுதியைச் சோ்ந்த தங்க நகை வியாபாரிகளான நரேந்தா், சீட்டல்குமாா், மகாவீா் மேத்தா ஆகியோரிடம் இதேபோல ஏமாற்றியிருப்பதும், மோசடி மூலம் தங்கக் கட்டிகளை சஞ்சய் மைதியிடம், பிரபாத் மைதி கொடுத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள புத்தாதேவ் புனியாவை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.