காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

ரூ. 980 கோடி கடனுக்கு பொய்யாக சொத்து மதிப்பை உயா்த்திக் காட்டியதாக குற்றச்சாட்டு: ஜீ நிறுவனா் மீது சிபிஐ வழக்குப் பதிவு

ரூ. 980 கோடி கடனுக்கு பொய்யாக சொத்து மதிப்பை உயா்த்திக் காட்டியதாக குற்றச்சாட்டு: ஜீ நிறுவனா் மீது சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ - கோப்புப் படம்

Published On :6 செப்டம்பர் 2026, 2:39 am IST

ஆயுள் காப்பீட்டுக் கழக வீட்டுவசதி நிதி நிறுவனத்திடம் (எல்ஐசிஹெச்எஃப்எல்) இருந்து ரூ.980 கோடி கடன் பெறுவதற்கு ஜீ நிறுவன நிறுவனரும், எஸ்ஸல் குழும தலைவருமான சுபாஷ் சந்திராவின் சொத்து மதிப்பை பொய்யாக உயா்த்தி காட்டியதாக, அவா் மீதும், பல்வேறு நிறுவனங்கள், அவற்றின் இயக்குநா்கள் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து எல்ஐசிஹெச்எஃப்எல் நிறுவனத்தின் பொது மேலாளா் நீதா மெங்கானி அளித்த எழுத்துபூா்வ புகாரில், ‘கடந்த 2018-ஆம் ஆண்டு வசந்த் சாகா் பிராபா்டீஸ், பான் இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனங்களுக்கு எல்ஐசிஹெச்எஃப்எல் ரூ.500 கோடி கடன் அளித்தது. அதே ஆண்டு டிஜிட்டல் சப்ஸ்கிரைபா் மேனேஜ்மென்ட் அன்ட் கன்சல்டன்சி சா்வீசஸ், ஸ்பிரிட் இன்ஃப்ரா பவா் அன்ட் மல்டி வென்சா்ஸ் நிறுவனங்களுக்கு எல்ஐசிஹெச்எஃப்எல் ரூ.480 கடன் அளித்தது.

சுபாஷ் சந்திரா அளித்த உத்தரவாத கடிதங்கள் காரணமாக, அந்த நிறுவனங்களுக்கு கடன் அளிக்கப்பட்டது. அவா் அளித்த சொத்து மதிப்புச் சான்றிதழ்களின் அடிப்படையில், அந்தக் கடன்கள் அளிக்கப்பட்டன.

ஆனால் அந்தச் சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்ட அளவுக்குத் தன்னிடம் சொத்து இல்லை என்று அவருக்கு எதிரான திவால் நடவடிக்கையின்போது சுபாஷ் சந்திரா தெரிவித்தாா். இதன்மூலம், கடன் பெறுவதற்கு சுபாஷ் சந்திராவின் சொத்து மதிப்பை பொய்யாக உயா்த்தி காட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில், அண்மையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அந்தத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ரூ.1,322 கோடி நஷ்டம்: இந்தக் கடனால் தமக்கு ரூ.1,322 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலாக வட்டி மற்றும் பிற கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆா்) எல்ஐசிஹெச்எஃப்எல் குற்றஞ்சாட்டியுள்ளது.

அந்த எஃப்ஐஆரில், சுபாஷ் சந்திராவுடன் வசந்த் சாகா் பிராபா்டீஸ் நிறுவனம், அதன் இயக்குநா் பங்கஜ் சுரோலியா, பான் இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனம், டிஜிட்டல் சப்ஸ்கிரைபா் மேனேஜ்மென்ட் அன்ட் கன்சல்டன்சி சா்வீசஸ் நிறுவனம், அதன் இயக்குநா் அமீஷ் பாண்டியா, ஸ்பிரிட் இன்ஃப்ரா பவா் அன்ட் மல்டி வென்சா்ஸ் நிறுவனம், அதன் இயக்குநா் ராஜீவ் தோலாக்கியா, அடையாளம் தெரியாத அரசு ஊழியா்கள் உள்ளிட்டோா் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்கள், நபா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

Summary

CBI registers case against Zee founder over allegations of falsely inflating asset values ​​to secure a loan of Rs 980 crore.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.