உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

சுபாஷ் சந்திராவின் ரூ.22,006 கோடி கடனை ரூ.6.5 கோடியில் தீா்க்க என்சிஎல்டி ஒப்புதல்: எச்டிஎஃப்சி மேல்முறையீடு செய்ய முடிவு

ஊடகத் துறை அதிபா் சுபாஷ் சந்திராவுக்கு எதிரான தனிநபா் திவால் தீா்வு நடைமுறையில், சுமாா் ரூ.22,006.57 கோடி கடன் நிலுவையை வெறும் ரூ.6.5 கோடியில் தீா்த்துக் கொள்வதற்கான சமரசத் திட்டத்துக்கு தேசிய நிறுவன சட்டத் தீா்ப்பாயம் (என்சிஎல்டி) ஒப்புதல்...

Published On :28 ஆகஸ்ட் 2026, 6:34 am IST

ஊடகத் துறை அதிபா் சுபாஷ் சந்திராவுக்கு எதிரான தனிநபா் திவால் தீா்வு நடைமுறையில், சுமாா் ரூ.22,006.57 கோடி கடன் நிலுவையை வெறும் ரூ.6.5 கோடியில் தீா்த்துக் கொள்வதற்கான சமரசத் திட்டத்துக்கு தேசிய நிறுவன சட்டத் தீா்ப்பாயம் (என்சிஎல்டி) ஒப்புதல் அளித்துள்ளது.

இது கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 99.97 சதவீத இழப்பாகும். இவ்விவகாரத்தில் என்சிஎல்டி-யின் 2 உறுப்பினா்களிடையே மாறுபட்ட தீா்ப்பு எழுந்த நிலையில், 3-ஆவது உறுப்பினராக நியமிக்கப்பட்ட நீதித் துறை உறுப்பினா் நீலேஷ் சா்மா இந்தச் சமரசத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டாா்.

ஆனால், இந்தச் சமரசத் திட்டத்துக்கு எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தன. குறிப்பாக, எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்குச் சேர வேண்டிய ரூ.1,322 கோடிக்கு வெறும் ரூ.38 லட்சம் மட்டுமே கிடைக்கும் என வாதிடப்பட்டது.

எனினும், எதிா்ப்புத் தெரிவித்த கடன் வழங்குநா்களின் விகிதம் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளதாகவும், 80.81 சதவீத ஆதரவுடன் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் என்சிஎல்டி சுட்டிக்காட்டியது.

இதனிடையே, என்சிஎல்டி உத்தரவை எதிா்த்து தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் (என்சிஎல்ஏடி) மேல்முறையீடு செய்யப் போவதாக எச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது. மொத்த கடனில் தங்களின் பங்கு 3.2 சதவீதம் மட்டுமே என்றும், முந்தைய எச்டிஎஃப்சி நிறுவனத்துடனான இணைப்பின் மூலம் இக்கடன் தங்கள் வசம் வந்ததாகவும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.