சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

வெற்றி மகளிர் தொழில் முனைவோர் திட்டத்தில் ரூ. 500 கோடி கடன்! தொழில் துறை அறிவிப்புகள்!

விழுப்புரம் ஓமந்தூர் பகுதியில் 229 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பூங்கா ரூ.146 கோடியில் சிப்காட் நிறுவனம் அமைக்கப்படும்.

Industrial sector announcements

அமைச்சர் கீர்த்தனா - DIPR

Published On :25 ஆகஸ்ட் 2026, 7:29 pm IST

தமிழ்நாட்டில் மகளிர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக "வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்" என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா இன்று (ஆக. 25) தெரிவித்தார்.

தொழில்முனைவோர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் உதவி, கடன் பங்களிப்பு தொகையில் சலுகை மற்றும் பிணையச் சொத்து வழங்குதலில் சலுகை ஆகிய உதவிகளுடன் மகளிர் தொழில்முனைவோர்கள் எளிதாக தொழில் கடன் உதவி பெற வழி வகை செய்யப்படும்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் இத்திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி கடனுதவி வழங்கப்படும். 500-க்கும் மேற்பட்ட மகளிர் தொழில் முனைவோர்கள் பயன்பெறுவர்.

ரூ.6 கோடியில் கரூரில் வெற்றி நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் தொழில் அலகு அமைக்கப்படும். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் ஆண்டொன்றுக்கு 5,000 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட "வெற்றி நோட்டு புத்தகங்கள்" தயாரிக்கும் தொழில் அலகு கரூர் மாவட்டம், மாயனூரில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் நோட்டுப் புத்தகங்கள் தமிழக அரசின் விலையில்லா நோட்டுப் புத்தக திட்டம் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

வளர்ந்து வரும் எதிர்காலத் தொழில்நுட்பங்களின் போக்குகள் குறித்து ஆராய ஆலோசனைக் குழு அமைக்கப்படும். 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற தமிழ்நாடு அரசின் இலக்கினை எய்திட தமிழ்நாடு உலகளாவிய ஏற்றுமதி இயக்கம், பசுமை மாற்றம் மற்றும் ஏற்றுமதிப் போட்டித்திறன் முன்னெடுப்பு மற்றும் வளர்ந்து வரும் எதிர்காலத் தொழில்நுட்பங்களின் போக்குகள் குறித்து ஆராய ஆலோசனைக் குழு அமைக்கப்படும்.

எதிர்காலத்திற்கேற்ற கொள்கைகள், தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளுதல், புத்தாக்கம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இக்குழு பரிந்துரைக்கும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் (MSME) நிறுவனங்களுக்கு விரைவான, வெளிப்படையான கடன் சேவை வழங்கப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக மற்றும் வெளிப்படைத்தன்மையுடனான கடன் வழங்கலுக்காக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கடன் வழங்கும் செயல்முறைகள் முழுமையாக (End to end) மின்னணுமயமாக்கப்படும். இதன்மூலம், குறைந்த செயலாக்க நேரம், சிறந்த வெளிப்படைத்தன்மை, மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் விரைவான செயல்பாட்டுத் திறன் ஆகியவை உறுதி செய்யப்படும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுகடன் உறுதி செய்யப்படும்.

திருநெல்வேலி - காற்றாலைப் பண்ணைகளை புதுப்பிக்க, சூரிய மின்சார, மின் உற்பத்தி நிலையம் அமைக்க நடவடிக்கை. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக திருநெல்வேலி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் காற்றாலைப் பண்ணைகள் புதுப்பிக்கப்படும்.

சூரிய மின் உற்பத்தி தயாரிக்கும் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.7,000 ஆக உயர்த்தப்படும்.

உப்பளத் தொழிலாளர் குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 23,000 தொழிலாளர் குடும்பங்கள் பயனடையும். இதற்கான செலவினை அரசே ஏற்கும்.

தமிழ்நாடு உலகளாவிய திறன் மையங்கள் (GCC) வழித்தடம் மற்றும் வளர்ச்சித் திட்டம் தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (GCC) பெருமளவில் ஏற்படுத்திட தமிழ்நாடு உலகளாவிய திறன் மையங்கள் (GCC) வழித்தடம் மற்றும் வளர்ச்சித் திட்டம்;

பல்லாவரம் முதல் துரைப்பாக்கம் வரையிலான ரேடியல் சாலை, மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலை (OMR) ஆகிய பகுதிகளில் ஏற்படுத்தப்படும்.

இத்தடத்தில், தகுதியான வளாகங்களுக்கு அதிகரிக்கப்பட்ட தளப் பரப்புக் குறியீடு (FSI) வழங்குவதற்கான முயற்சிகளுடன், பொது உட்கட்டமைப்பு மற்றும் பகிரப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும்.

விழுப்புரம் ஓமந்தூர் பகுதியில் 229 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பூங்கா ரூ.146 கோடியில் சிப்காட் நிறுவனம் அமைக்கப்படும்.

இப்பூங்காவில் அத்தியாவசியமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் ரூ.1,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன் 3,200 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

சிவகாசி வெடிபொருள் பொது வசதி மையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை ரூ.2 கோடியில் தயாரிக்கப்படும்.

சிவகாசி, போட்டித்திறன் மிக்க வெடிபொருள் தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் உற்பத்தி மையமாக மாற்றப்படும். வெடிபொருள் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு தேசிய அளவில் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.

Summary

₹500 crore in loans under the 'Vetri' Women Entrepreneurs Scheme! Industrial sector announcements

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.