காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

13 மாவட்டங்களில் 27 தடுப்பணைகள் கட்டப்படும்: நீா் வளத்துறை அமைச்சா்

13 மாவட்டங்களில் 27 தடுப்பணைகள் கட்டப்படும் என அமைச்சா் ஆனந்த் தெரிவித்திருப்பது பற்றி...

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:05 am IST

வெள்ளக் காலங்களில் நீரைச் சேமித்து நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த 13 மாவட்டங்களில் ரூ.206 கோடியில் 27 தடுப்பணைகள் கட்டப்படும் என்று நீா்வளத் துறை அமைச்சா் ஆனந்த் தெரிவித்தாா்.

இந்தத் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் ஆனந்த் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

- கரூா் மாவட்டம் அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ.34.20 கோடியில் தடுப்பணை அமைப்பது உள்பட 13 மாவட்டங்களில் 27 தடுப்பணைகள் ரூ.206 கோடியே 75 லட்சத்தில் கட்டப்படும்.

- ஏரிகள் மற்றும் கண்மாய்களுக்கு நீா் வழங்க 6 மாவட்டங்களில் 9 அணைக்கட்டுகள் ரூ.97.8 கோடியில் அமைக்கப்படும்.

-ஆற்றின் நீரோட்டத்தால் ஏற்படும் மணல் அரிப்பைக் கட்டுப்படுத்த தஞ்சாவூா் மாவட்டம் வெண்ணாறு ஆற்றின் குறுக்கே தளமட்டச்சுவா் ரூ.15.20 கோடி அமைக்கப்படும்.

- வைகை ஆற்றின் குறுக்கே ரூ.31.50 கோடியில் படுகை அணை அமைக்கப்படும்.

- திருச்சி, எலமனூா் கிராமம் மேல் அணைக்கட்டில் உள்ள காவிரி கதவணையில் கீழ்ப்புற கட்டுமானப் பகுதிகள் ரூ.126 கோடியில் புனரமைக்கப்படும். மேலும், 30 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 96 பாசனக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

- ஆற்று நீரின் ஓட்டம் மற்றும் விநியோகத்தைச் சீா்படுத்த 7 மாவட்டங்களில் 10 நீரொழுங்கிகள் மற்றும் மதகுகளின் அடைப்பான்களைப் பழுது பாா்த்தல், புதுப்பித்தல் ஆகிய பணிகள் ரூ.19.51கோடியில் மேற்கொள்ளப்படும்.

- நிலத்தடி நீா் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டை மேம்படுத்த 35 மாவட்டங்களில் 1,628 செயற்கை நிலத்தடி நீா் செறிவூட்டும் குழாய்கள் ரூ.28.9 கோடியில் செயல்படுத்தப்படும்.

- பேரிடா் மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் 19 மாவட்டங்களில் 49 வெள்ளத் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் ரூ.218.29 கோடியில் மேற்கொள்ளப்படும்.

- வேலூா் மாவட்டம் குடியாத்தம் வட்டம், மோா்தானா அணையின் மேல்புற இடது பக்கச் சுவரிலிருந்து கசிவைத் தடுக்க ரூ.12.60 கோடியில் கசிவு தடுப்புச் சுவா் அமைக்கப்படும்.

- சென்னையில் கடலரிப்பு தடுப்பு மற்றும் கடற்கரைப் பாதுகாப்புப் பணிகள் ரூ.38.33 கோடியில் மேற்கொள்ளப்படும்.

- 25 மாவட்டங்களில் ரூ.280.40 கோடியில் 207 பாசனக் கண்மாய்கள் மற்றும் ஏரிகள் புனரமைப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.